குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பை நோக்கமாகக் கொண்டு அசாமில் தேனீ வளர்ப்பு பெட்டிகள், ஊறுகாய் தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் தானியங்கி அகர்பத்தி இயந்திரங்கள் ஆகியவற்றை கேவிஐசி தலைவர் வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2023 3:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையத் தலைவர் திரு மனோஜ்குமார் அசாமில் இன்று 3 வெவ்வெறு விநியோக நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிகளில் தேனீ வளர்ப்பு பெட்டிகள், ஊறுகாய் தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் தானியங்கள் அகர்பத்தி இயந்திரங்கள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

தமுல்பூரில் உள்ள குமரிகட்டம் கிராமத்தில் 50 தேனீ வளர்ப்பாளர்களுக்கு 500 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. குவஹாத்தியில் உள்ள கேவிஐசி வளாகத்தில் 40 ஊறுகாய் தயாரிப்பு இயந்திரங்களும், 20 தானியங்கி அகர்பத்தி இயந்திரங்களும் அளிக்கப்பட்டன.

***

SM/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1922799) வருகையாளர் எண்ணிக்கை : 203
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Telugu