நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான 24வது தேசிய நாடாளுமன்றப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
03 MAY 2023 11:40AM by PIB Chennai
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான 24வது தேசிய இளைஞர் பாராளுமன்றப் போட்டி, 2022-23-யின் பரிசு வழங்கும் விழா, மே 4, வியாழன் அன்று புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும்.
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சக இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் விழாவிற்கு தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வித்யாலயா பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான 24-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில், முதலிடம் பிடித்த மேற்கு வங்க மாநிலம், நாடியா ஜவஹர் நவோதயா வித்யாலயா (பாட்னா மண்டலம்) மாணவர்கள் இளைஞர் நாடாளுமன்ற செயல்திறனை மீண்டும் வழங்குவார்கள்.
நாடாளுமன்ற விவகார அமைச்சகம் கடந்த 26 ஆண்டுகளாக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நடத்தி வருகிறது. ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டித் திட்டத்தின் கீழ், இந்தத் தொடரின் 24வது போட்டி 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா சமிதியின் 8 பிராந்தியங்களில் உள்ள 80 வித்யாலயாக்களுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டது.
போட்டியில் முதலிடம் பிடித்ததற்கான கோப்பை, ஜவஹர் நவோதயா வித்யாலயா, நாடியா, மேற்கு வங்காளத்திற்கு (பாட்னா மண்டலம்) வழங்கப்படும். 7 வித்தியாலயள்ளளுக்கு பிராந்தியத்தில் முதலிடம் பெற்றதற்காக தகுதிக் கோப்பைகளும் வழங்கப்படும்.
***
AD/PKV/KPG
(Release ID: 1921680)
Visitor Counter : 172