தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு' குறித்த ட்ராய் அறிக்கை தொடர்பான கருத்துகள்/எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

Posted On: 02 MAY 2023 4:10PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் ஏப்ரல் 06, 2023 அன்று 'விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு' குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. இதனுடன் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி. மே 04, 2023 என்றும் எதிர் கருத்துகளுக்கு மே 18, 2023 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பான பல்வேறு பிரிவினரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே மே 18, 2023 மற்றும் ஜூன் 01, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட்டிப்புக்கான கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது.

கருத்துகள்/எதிர் கருத்துகள் திரு அகிலேஷ் குமார் திரிவேதி, ஆலோசகர் (நெட்வொர்க்குகள், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம்), ட்ராய் என்ற முகவரிக்கு  அனுப்பப்படலாம். மின்னணு வடிவத்தில் advmn@trai.gov.in இல் அனுப்பலாம், மேலும் ஏதேனும் விளக்கம் பெற /தகவல்களுக்கு +91-11-23210481 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

***

AD/PKV/KPG

 


(Release ID: 1921466) Visitor Counter : 161