நிதி அமைச்சகம்
ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடி வசூல்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு 12% அதிகம்
தமிழ்நாட்டின் ஏப்ரல் மாத வசூல் ரூ.11, 559 கோடி
Posted On:
01 MAY 2023 5:46PM by PIB Chennai
2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,87,035 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி ₹ 38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹ 47,412 கோடி, ஐஜிஎஸ்டி ₹ 89,158 கோடி (செஸ் ₹ 34,972 கோடி உட்பட).
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ₹45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ₹37,959 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஏப்ரல் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ₹84,304 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ₹85,371 கோடியும் ஆகும்.
ஏப்ரல் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.
முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 ஏப்ரல் 20ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 68,228 கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்ச ஒற்றை நாள் கட்டணம் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 57,846 கோடியாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்.
***
AD/PKV/KPG
(Release ID: 1921241)
Visitor Counter : 408