பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை

प्रविष्टि तिथि: 28 APR 2023 4:46PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சரும், ஜெனரல் செர்ஜி கே.ஷோய்குவுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ உறவுகள், பாதுகாப்பு தொழில் கூட்டாண்மை உள்ளிட்ட விசயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையை அவர்கள் மேற்கொண்டனர். மேக் இன் இந்தியா முன்முயற்சியில் ரஷ்ய பாதுகாப்பு தொழிலின் பங்கேற்பு குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இந்தியாவுக்கும். ரஷ்யாவுக்கும் இடையே ஆண்டுகள் பலவற்றை கடந்த நீண்ட தனித்துவமான உறவு குறித்தும் இரு அமைச்சர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

***

(Release ID: 1920528)


(रिलीज़ आईडी: 1920555) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam