பிரதமர் அலுவலகம்
டாமனில் நமோ பாதை, தேவகா கடல்முனை ஆகியவற்றை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்
प्रविष्टि तिथि:
25 APR 2023 10:00PM by PIB Chennai
டாமனில் நமோ பாதை, தேவகா கடல்முனை ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார். விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்ததும், கட்டிட தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் பிரதமர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். புதிய பாரத் சுய உருவப்படம் எடுக்கும் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.
5.45 கிலோமீட்டர் தூரம் கொண்ட தேவகா கடல்முனை ரூ. 165 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலமாகவும், சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து, அதன் மூலம் இந்த கடல்முனை உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்மிகு விளக்குகள், வாகன நிறுத்தும் வசதி, பூங்காக்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்த உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக இந்த கடற்கரை முகப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டயு மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரஃபுல் படேல் உடனிருந்தார்.
***
(Release ID: 1919662)
AP/RB/RR
(रिलीज़ आईडी: 1919792)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam