மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
எதிர்காலத்திற்கேற்ற பணியாளர் கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பான பயிலரங்கில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்
Posted On:
25 APR 2023 5:02PM by PIB Chennai
எதிர்காலத்திற்கேற்ற பணியாளர் கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பான இந்திய - சிங்கப்பூர் பிரதிநிதிகள் பங்கேற்ற பயிலரங்கில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (25.04.2023) உரையாற்றினார். புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்காலத்திற்கேற்ற பணியாளர் மற்றும் திறன் கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் கூட்டு பயிரங்கம், அனுபவம் மற்றும் அறிவு பகிர்வுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார். இதை நோக்கமாக கொண்டே புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த பயிலரங்கில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் திரு சைமன் வாங்க், சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் துணை செயலாளர் திருமதி மெலிசா கூ உள்ளிட்டோரும் மத்திய உயர்க்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய்குமார் உள்ளிட்ட மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
***
(Release ID: 1919600)