பாதுகாப்பு அமைச்சகம்
தில்லி தண்ணீர் வாரியத்தில் இருந்து தண்ணீர் விநியோகம் மற்றும் புதிய நுழைவு வாயில் திறப்பு விழா
Posted On:
22 APR 2023 4:25PM by PIB Chennai
பாலம், அடிப்படை பழுது பார்ப்பு நிலையம் (பிஆர்டி), புதிய நுழைவு வாயில் மற்றும் புது தில்லி தண்ணீர் வாரியம் மூலம் தண்ணீர் விநியோகம் ஆகியவற்றுக்கான திறப்புவிழா இன்று நடைபெற்றது. தில்லி ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே இந்த இரு திட்டங்களையும் திறந்து வைத்ததன் மூலம் இன்று ஒரு வரலாற்று நாளாக மாறியுள்ளது என்றார். 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நன்னீர் விநியோகத்திற்கான திட்டம் தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாலம் இரயில்வே பாதைக்கு அருகில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இப்போது பழுது பார்ப்பு நிலையத்தை (BRD)அதிக இடையூறு இல்லாமல் அணுக முடியும்.
ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே, விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மகிழ்ச்சியை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தியதில் திருப்தி தெரிவித்தார். அதிக ஆர்வத்துடன் தனது செயல்பாட்டுப் பணியை நிறைவேற்றுவதில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்றுமாறு பிஆர்டி பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.
ஏர் கமோடோர் எஸ்எஸ் ரெஹால், இரண்டு திட்டங்களும் வெற்றிபெற முழு மனதுடன் பங்களித்த தில்லி தண்ணீர் வாரியம் , தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட், ராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் நிலையத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் விமான அதிகாரி நன்றி தெரிவித்தார்.
***
PKV/CJL/DL
(Release ID: 1918794)
Visitor Counter : 149