சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2023 10:49AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 487 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 63,562 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.14 சதவீதமாகும்.

தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.67 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 8,175 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,50,649 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 4.39% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.14% இதுவரை மொத்தம் 92.46 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,40,014 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

***

(Release ID: 1917810)


(வெளியீட்டு அடையாள எண்: 1917825) வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Malayalam