பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க முடிவின்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் பல வகை பணியாளர் தேர்வையும் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலையிலான பணியாளர் தேர்வையும் இந்தி, ஆங்கிலத்துடன் மேலும் 13 மாநில மொழிகளில் நடத்த ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
18 APR 2023 1:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க முடிவின்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் பல வகை பணியாளர் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலையிலான பணியாளர் தேர்வு 2022-ஐ இந்தி, ஆங்கிலத்துடன் மேலும் 13 மாநில மொழிகளில் நடத்த ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மாநில இளைஞர்கள் பங்கேற்புக்கும், மாநில மொழிகளை ஊக்கப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன் முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் 13 மாநில மொழிகளிலும், அதாவது அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி
(மேய்ட்டியும் கூட) கொங்கணி ஆகிய மொழிகளிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.
இந்த முடிவின் காரணமாக தங்கள் தாய்மொழியில் / மாநில மொழியில் தேர்வில் பங்கேற்கும் லட்சகணக்கானவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களிலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து இந்த ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் / வங்கி ஊழியர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றின் தேர்வுகளில் பயன்படுத்துவது போல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளையும் 14 மொழிகளில் தொடங்கி படிப்படியாக இந்த எண்ணிக்கையை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உயர்த்தலாம் என இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது. இதனை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி பல்வகை பணியாளர் தேர்வு 2022, சிஎச்எஸ்எல்இ 2022 ஆகியவற்றை 15 மொழிகளில் ( 13 மாநில மொழிகள் + இந்தி + ஆங்கிலம் ) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஎச்எஸ்எல்இ தேர்வுக்கான அறிவிப்பு 2023 மே-ஜூன் மாதங்களில் வெளியிடப்படும். பல்வகைப் பணியாளர் தேர்வை பொறுத்தவரை பல மொழியிலான முதல் தேர்வு மே மாதம் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.
***
(Release ID: 1917585)
AP/SMB/MA/KRS
(Release ID: 1917681)
Visitor Counter : 516