நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2023, ஏப்ரல் 18 அன்று மும்பையில் முதன் முறையாக மனை வணிகத்துறைக் குறித்த நுகர்வோர் குறை தீர்ப்புக்கு, நுகர்வோர் ஆணையங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மத்திய அரசு விவாதிக்க உள்ளது
प्रविष्टि तिथि:
17 APR 2023 1:38PM by PIB Chennai
நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகளை பைசல் செய்வதற்கான முந்தைய முயற்சிகளின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறை தற்போது 2023, ஏப்ரல் 18 அன்று மும்பையில் “மனை வணிகத்துறை தொடர்பான குறைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது” என்ற வட்டமேஜை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு மகாராஷ்ட்டிர அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஆணையங்களில் உள்ள மொத்த வழக்குகளில் சுமார் 10 சதவீதம் மனை வணிக வழக்குகளாக இருக்கின்றன. இதுவரை பல்வேறு நுகர்வோர் ஆணையங்களின் 2,30,517 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 1,76,895 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 53,622 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீட்டு வசதித்துறை தொடர்பான வழக்குகளைக் கையாள மனைவணிக ஒழுங்குமுறை ஆணையம், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) போன்ற தனி நடுவர் மன்றங்கள் உள்ள போதும் பல்வேறு நுகர்வோர் ஆணையங்களில் நிலுவை வழக்குகள் அதிகரிக்கின்றன.
முதன் முறையாக மனைவணிகத் துறையில் நுகர்வோர் துறைகளுக்குத் தீர்வு காண எவ்வளவு பெரிய மாநாட்டினை நுகர்வோர் நலத்துறை நடத்துகிறது. நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்.
----
AP/SMB/KPG/KRS
(रिलीज़ आईडी: 1917357)
आगंतुक पटल : 207