பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானில் உள்ள வக்கயாமாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்

Posted On: 15 APR 2023 2:50PM by PIB Chennai

ஜப்பானில் உள்ள வக்கயாமாவில், ஜப்பான் பிரதமர் திரு.ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட  ஒரு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"ஜப்பானில் உள்ள வக்கயாமாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் எனது நண்பர் PM @Kishida230 கலந்துகொண்டபோது வன்முறை சம்பவம் நடந்ததாக அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில்  நிம்மதி அடைந்தேன். அவர் தொடர்ந்து நலமுடனும்  நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கப்  பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது."

***

AD/SMB/DL


(Release ID: 1916910) Visitor Counter : 156