குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நாபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 13 APR 2023 5:42PM by PIB Chennai

ஏப்ரல் 14, 15- 2023 அன்று கொண்டாடப்படும் வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த விவசாயிகளின் விழாக்கள், இந்தியாவின் செழுமையான, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த விழாக்கள் நமது உணவளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பைப் போற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாகும்.

இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், நமது மக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்பவும் நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

                                                                                                                                      ***

AP/IR/AG/KPG


(रिलीज़ आईडी: 1916301) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi