மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

ஒரே சுகாதார தேசிய இயக்கத்தின் கீழ் "கால்நடைப் பெருந்தொற்று தடுப்புத் தயார் நிலை முன்னெடுப்பை” மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா நாளை தொடங்கிவைக்கிறார்

Posted On: 13 APR 2023 9:18AM by PIB Chennai

ஒரே சுகாதார தேசிய இயக்கத்தின் கீழ் கால்நடைப் பெருந்தொற்று தடுப்புத் தயார் நிலை முன்னெடுப்பு மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் ஒரே சுகாதாரத்திற்கான கால்நடை சுகாதார ஆதரவு திட்டத்தை  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா நாளை (ஏப்ரல்14,2023)  புதுதில்லியில் தொடங்கிவைக்கிறார்.

இத்திட்டம் 5 மாநிலங்களில் 151 மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளது. கால்நடை சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மேலாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களின் திறன் மேம்பாட்டை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

75 மாவட்டங்கள் அல்லது பிராந்தியங்களில் உள்ள ஆய்வகங்களை மேம்படுத்துதல், 300  கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்துதல், 9000 கால்நடை மருத்துவ உதவிப் பணியாளர்களுக்கும், கால்நடை மருத்துவத்துறையில் உள்ள 5500 பேருக்கும் பயிற்சி அளித்தல் ஆகியவற்றை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் ரூ.1,228.70 கோடி நிதியுதவியுடன் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 

***

SMB/IR/AG/RR



(Release ID: 1916151) Visitor Counter : 123