பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாட்டை நாளை (ஏப்ரல் 12-ம் தேதி) புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்
Posted On:
11 APR 2023 3:42PM by PIB Chennai
பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாட்டை நாளை (12.04.2023) புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை சார்ந்த கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பாதுகாப்புத்துறை நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தங்களது கருத்துக்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டிற்கேற்ப திட்டங்களை திறம்பட்ட முறையில் அமல்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்தல் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரத்தில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
***
AP/PLM/RJ/KPG
(Release ID: 1915669)
Visitor Counter : 166