தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2022-23 –ம் ஆண்டில் தேசிய பணிச்சேவை (என்சிஎஸ்)யில் 35.7 லட்சம் பணியிடங்கள் பதிவிடப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
11 APR 2023 2:20PM by PIB Chennai
2015-ம் ஆண்டு பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு தொடங்கப்பட்ட தேசிய பணிச்சேவை இணையப் பக்கத்தில் 2022-23 –ம் ஆண்டில் 35.7 லட்சம் பணியிடங்கள் பணி வழங்குவோரால் பதிவிடப்பட்டுள்ளன. 2021-22-ல் இந்தப் பணியிடங்கள் எண்ணிக்கை சுமார் 13 லட்சமாக இருந்தது. இதையடுத்து, 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பணியிடங்களின் எண்ணிக்கை 175 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிதி மற்றும் காப்பீட்டுத்துறையில் 2022-23-ம் ஆண்டில் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 20.8 லட்சமாக பதிவாகியுள்ளது. இதேபோல், செயல்பாடுகள் மற்றும் உதவி செய்யும் துறையிலும், பணியிடங்களின் எண்ணிக்கை 3.75 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பொருத்தமான பணி, பணிக்கான கலந்தாய்வு, தொழிற்பயிற்சிக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்புகள் குறித்த தகவல், நேர்முகப் பயிற்சி போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை தேசிய பணிச்சேவைத் திட்டம் வழங்குகிறது. இதனை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.
வேலைதேடுவோர், வேலைவழங்குவோர், பயிற்சி அளிப்போர், பணிக்கான வாய்ப்பு தரும் அமைப்புகள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கட்டணமில்லாமல் அனைத்து சேவைகளையும் தேசிய பணிச்சேவைகள் இணையப்பக்கம் வழங்குகிறது.
****
AD/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1915662)
आगंतुक पटल : 219