சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அனைத்து பருவ காலங்களிலும் லடாக்கி்ற்கு போக்குவரத்தை ஏற்படுத்தும் ஆசியாவின் நீளமான சுரங்கப்பாதையான சோஜிலா சுரங்கப்பாதையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹாவுடன் இணைந்து திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்
Posted On:
10 APR 2023 1:15PM by PIB Chennai
அனைத்து பருவ காலங்களிலும் லடாக்கிற்கு போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆசியாவின் நீளமான சுரங்கப்பாதையான ஜோஷிலா சுரங்கப்பாதையையும், ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள முக்கிய திட்டங்களையும் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீரில், ரூ.25,000 கோடி செலவில் 19 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ரூ.6,800 கோடி செலவில் 13.14 கிலோ மீட்டர் நீளத்திற்கு சோஜிலா சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை 28 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1915382)
Visitor Counter : 193