உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித்ஷா, அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கிராமமான கிபித்தூவில் 'துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தை' ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

Posted On: 08 APR 2023 12:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கான சாலை இணைப்புக்காக பிரத்யேகமாக ரூ.2500 கோடி உட்பட ரூ.4800 கோடியின் மதிப்பிலான   'துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்திற்கு' அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் தங்குவதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவும்.

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் & ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் வடக்கு எல்லையை ஒட்டிய 19 மாவட்டங்களின் 46 தொகுதிகளில் 2967 கிராமங்கள் 'துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தின்' கீழ் விரிவான வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

திரு அமித் ஷா அருணாச்சலப் பிரதேச அரசின் "பொன்விழா எல்லை ஒளிர்வுத் திட்டத்தின்" கீழ் கட்டப்பட்ட ஒன்பது சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்(ITBP) பணியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்  திட்டங்களையும் அவர் வெளியிடுவார்.

 

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித்ஷா  நாம்டி களத்திற்குச் சென்று வாலாங் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

 

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு.அமித் ஷா ஏப்ரல் 10-11, 2023 அன்று அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். தனது பயணத்தின் முதல் நாளில் ஏப்ரல் 10, 2023 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான கிபித்தூவில் 'துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தை' தொடங்கி வைக்கிறார். .

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2022-23,  2025-26 வரையான நிதியாண்டுகளுக்கான சாலை இணைப்புக்காக ரூ.2500 கோடி உட்பட ரூ.4800 கோடி அளவிலான 'துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்திற்கு' (விவிபி) இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டம்( VVP ) என்பது மத்திய நிதியுதவி திட்டமாகும், இதன் கீழ் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் & ஹிமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வடக்கு எல்லையை ஒட்டிய 19 மாவட்டங்களின் 46 தொகுதிகளில் 2967 கிராமங்கள் விரிவான வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 455 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 662 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

அடையாளம் காணப்பட்ட எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த இடங்களில் தங்குவதை ஊக்குவிக்கவும் துடிப்பான கிராமங்கள் திட்டம் உதவும். சாலை இணைப்பு, குடிநீர், சூரிய மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின்சாரம்,  இணைய இணைப்பு, சுற்றுலா மையங்கள், பல்நோக்கு மையங்கள் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும்.

 

ஏப்ரல் 10, 2023 அன்று கிபித்தூவில் "பொன்விழா எல்லை ஒளிர்வுத் திட்டத்தின்" கீழ் கட்டப்பட்ட அருணாச்சலப் பிரதேச அரசின் ஒன்பது சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களை திரு அமித் ஷா திறந்து வைக்கிறார். இந்த மின் திட்டங்கள் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும். லிகாபாலி (அருணாச்சலப் பிரதேசம்), சாப்ரா (பீகார்), நூரநாடு (கேரளா) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பைப் பெருக்குவதற்கான திட்டங்களையும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் கிபித்தூவில்  இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) பணியாளர்களுடன் உரையாடுவார். எல்லையோர மாவட்டங்களின் சுயஉதவி குழுக்களின் பெண் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும். எல்லையோர கிராமப் பெண்களின் முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவர்களைப் பாராட்டுவதற்கும் திரு. அமித் ஷா கண்காட்சிக் கூடங்களுக்குச் செல்கிறார். ஏப்ரல் 11, 2023 அன்று, நாம்டி களத்திற்குச் சென்று வாலோங் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்.

***

CJL/SM/DL/RS



(Release ID: 1914872) Visitor Counter : 182