பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 APR 2023 9:17PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஓஎன்ஜிசி/எண்ணெய், புதிய ஆய்வு உரிமக் கொள்கை (NELP) தொகுப்புகள் மற்றும் புதிய ஆய்வு உரிமக் கொள்கைக்கு முந்தைய தொகுப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுக்கான திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தம் (PSC) விலைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்திள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு நிலையான விலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், அதே நேரத்தில் உற்பத்தியாளர்களுக்கு பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்கத்தொகைகளுடன் போதுமான பாதுகாப்பையும் வழங்கும்.

2030-ம் ஆண்டில் இந்தியாவில் எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்போதைய 6.5%-லிருந்து 15%-ஆக அதிகரிக்க அரசு  இலக்கு வைத்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் இயற்கை எரிவாயு நுகர்வுகளை விரிவுபடுத்த உதவுவதோடு கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுவதோடு நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய உதவும்.

தற்போது, 2014-ம் ஆண்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, இயற்கை எரிவாயு விலை தீர்மானிக்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதலின்படி, 6 மாத காலத்திற்கு சமையல் எரிவாயு விலைகளை அறிவிக்கப்படுகின்றன. முந்தைய வழிகாட்டுதல்கள் குறிப்பிடத்தக்க கால தாமதம் மற்றும் அதிக ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருந்ததால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கச்சா எண்ணெய்யுடன் விலைகளை இணைக்கின்றன.

                                                                                                                                            ------

SRI/CR/KPG


(Release ID: 1914532) Visitor Counter : 148