எஃகுத்துறை அமைச்சகம்
2022-23-ம் ஆண்டு நிதியாண்டில் எம்ஒஐஎல் நிறுவனம் 2-வது முறையாக அதிகபட்ச உற்பத்தி
प्रविष्टि तिथि:
03 APR 2023 1:30PM by PIB Chennai
2022-23ம் நிதியாண்டில் எம்ஒஐஎல் நிறுவனம் மிக அதிக அளவாக 13.02 லட்சம் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இத்தகையை அளவுக்கு மாகங்கனீசு தாதுவை இந்த நிறுவனம் உற்பத்தி செய்துவது இதுவே இரண்டாவது முறையாகும். 2021-22ம் ஆண்டை விட, 14 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் மூலம் முந்தையை சாதனையைக்காட்டிலும் 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ள எம்ஒஐஎல் நிறுவனத்தின் முதன்மை மேலாண்மை இயக்குநர் திரு அஜய் குமார் சக்சேனா, இனிவரும் நாட்களில் தாங்கள் நிறுவனம், அதிகபட்ச உற்பத்தியை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2022-23-ம் ஆண்டு நிதியாண்டில் 41,762 மீட்டர் ஆழத்திற்கு தோண்டி எம்ஒஐஎல் நிறுவனம் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2.7 மடங்கு உற்பத்தி அதிகரிப்பாகும்.
இதைபோல், எலெக்ராட்லிடிக் மாங்கனீசு டை -ஆக்சைடு (இஎம்டி) விற்பனையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரிப்பாகும். இஎம்டி என்பது மருந்துபொருட்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்திக்கு பயன்படும் 100சதவீத மாற்று வேதிப்பொருளாகும்.
மத்திய எஃகுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்ஒஐஎல் நிறுவனம் உள்நாட்டு மாங்கனீசு தாது உற்பத்தியில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 11 சுரங்கங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் வரும் 2030ம் ஆண்டுக்குள் 3 மில்லியன் டன் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் எம்ஒஐஎல் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
---------
(Release ID: 1913247)
AP/ES/RS/RR
(रिलीज़ आईडी: 1913290)
आगंतुक पटल : 202