ஊரக வளர்ச்சி அமைச்சகம்

40,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன - மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனை

Posted On: 31 MAR 2023 11:28AM by PIB Chennai

விடுதலையின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டமான அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக அமிர்த நீர் நிலைகளை கட்டமைக்கும் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 நீர்நிலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

      2023 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் 50,000 அமிர்த நீர் நிலைகளுக்கான பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 11 மாதங்களே ஆகியுள்ள நிலையில், குறுகிய காலத்தில் 40,000 நீர் நிலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

     2023 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தற்போது 80 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முக்கிய அம்சம் மக்கள் பங்களிப்பாகும். அனைத்து நிலைகளிலும் இதில் மக்கள் பங்களிப்பு அடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 நீர் நிலைகளை உருவாக்கும் அமிர்த சரோவர் இயக்கம், நீர்ப்பாசனம், மீன்பிடி தொழில்துறை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 17 பணிகளுக்கு பயனுள்ளதாக அமைகின்றன. இவை ஊரகப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றன.

     இந்த இயக்கத்தின் முக்கிய அம்சமாக அரசின் முழுமையான அணுகுமுறை அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் ரயில்வே, சாலை போக்குவரத்து, ஜல்சக்தி, பஞ்சாயத் ராஜ், சுற்றுச்சூழல் ஆகிய அமைச்சகங்கள் இணைந்து செயல்படுகின்றன.

         

***

AD/PLM/MA/KRS



(Release ID: 1912492) Visitor Counter : 173