பாதுகாப்பு அமைச்சகம்

தற்சார்பு இந்தியா: இந்திய கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தீயணைப்பு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Posted On: 30 MAR 2023 1:55PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய ஏதுவாக கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு முறை என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.

இந்த 4-ம் தலைமுறை உபகரணம் கோவா, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய தலைமுறை கரையோர ரோந்து கப்பலில்    பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு 4 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் சிறு குறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்புக்கு உந்துசக்தியாகவும் திகழும். இதன் வாயிலாக பாதுகாப்புத்துறையில் தற்சார்பு என்ற இலக்கை அடைய  வழிவகை உருவாகும்.

***

(Release ID: 1912193)

AD/ES/KPG/KRS



(Release ID: 1912322) Visitor Counter : 164