குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ராம நவமி வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAR 2023 2:02PM by PIB Chennai
ராம நவமி தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு.ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி விவரம் வருமாறு:
”ராம நவமி புனித நாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ராமர், சொல்லிலும், செயலிலும் மேன்மை, நேர்மை, சிந்தனையில் பெருந்தன்மை ஆகிய நித்தியமான நற்குணங்களை பிரதிபலிக்கிறார். ராம நவமி தினத்தையொட்டி, ராமபிரான் காட்டிய பாதையில், சக மனிதர்களுக்கு நீதி, உரிமைகளை வழங்கி, நாட்டு நலனை நோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோமாக”.
*****
(Release ID: 1912194)
AD/PKV/RR/KRS
(रिलीज़ आईडी: 1912243)
आगंतुक पटल : 171