நிதி அமைச்சகம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை அடுத்து, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகளின் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டம்
Posted On:
25 MAR 2023 4:32PM by PIB Chennai
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில சர்வதேச வங்கிகளின் தோல்வியால் ஏற்பட்டுள்ள சூழலைத் தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய நிதிமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரத் கலந்து கொண்டார்; நிதித்துறை செயலாளர் டாக்டர். விவேக் ஜோஷி, பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உலகளாவிய வங்கிகளின் நெருக்கடி சூழலில், குறுகிய கால மற்றும் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இந்த ஆய்வை நிதியமைச்சர் மேற்கொண்டார்.
ஆபத்து மேலாண்மை, வைப்புத் தொகைகள் மற்றும் சொத்துகளின் அடிப்படை ஆகியவற்றைப் பன்முகப்படுத்துதலில் கவனம் செலுத்துவதன் மூலம் தயார்நிலையுடன், உரிய விடாமுயற்சியுடன் செயல்படுமாறு நிதியமைச்சர் வங்கிகளைக் கேட்டுக் கொண்டார்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, வட்டி விகித அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், நெருக்கடிகளை சமாளிக்க தொடர்ந்து தயாராக இருக்கவும் பொதுத்துறை வங்கிளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தினார்.
***
AD/PKV/DL
(Release ID: 1910790)
Visitor Counter : 189