வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற பருவ நிலை திரைப்படத் திருவிழா (24-26 மார்ச் 2023)
Posted On:
23 MAR 2023 1:29PM by PIB Chennai
நகர்ப்புறம் 20-ன் ஒரு பகுதியாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், பிரான்ஸ் மேம்பாட்டு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து நகர்ப்புற பருவ நிலை திரைப்படத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து உள்ளிட்ட நாடுகளின் விருதுகளை வென்ற 11 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தத் திரைப்படங்கள் இனி வரும் மாதங்களில் புதுதில்லி, மும்பை, பெங்களுரூ, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் திரையிடப்படும். ஜி20 அமைப்பின் இந்தியத் தலைவர் திரு அமிதாப் காந்த் தலைமையில் நாளை புதுதில்லியில் நடைபெறும் தொடக்க விழாவில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய தூதர்கள் தொடக்கவுரை ஆற்றுகின்றனர். பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் பொதுமக்களை பங்கெடுக்கச் செய்வதே இந்த திரைப்பட விழாவின் நோக்கமாகும்.
இந்தத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக 20 நாடுகளைச்சேர்ந்த 150 திரைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 27 திரைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டு, இறுதியாக 11 திரைப்படங்களை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
SM/ES/RS/KRS
(Release ID: 1909887)
Visitor Counter : 187