மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாணவர்களின் சிந்தனையாற்றல் மேம்படவும், பாகுபாடுகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவும் உயர்மட்ட ஆய்வுக்குழுக் கூட்டத்திற்கு திரு தர்மேந்திர பிரதான் தலைமையேற்பு

प्रविष्टि तिथि: 20 MAR 2023 8:59PM by PIB Chennai

மாணவர்களின் சிந்தனையாற்றல் மேம்படவும்,  நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடுகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டத்திற்கு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமையேற்றார். இந்த துறையின் இணையமைச்சர் திரு சுபாஷ் சர்கார், பள்ளி, உயர்கல்வித்துறை, சிபிஎஸ்இ, ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசும் போது, திரு பிரதான், "குறைதீர்ப்புக்கான சிறந்த அமைப்பை பொறுப்புடன் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மூத்த அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். இது சம்பந்தமாக துறை சார்ந்த அனைவருடைய ஆலோசனைகளையும், ஆன்லைன் மூலமாக பெற வேண்டும்.  பாலின சமத்துவம், ஜாதி, கல்வி சார்ந்த அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கை, சிறந்த முறையில் ஆலோசனைகள், போன்றவைகள் முக்கிய பங்குபெறும். மாணவர்களின் உடல் சார்ந்த, உளவியல் ரீதியான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிவுறுத்தி உள்ளேன்" என்றார்.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வி தொடர்பான அழுத்தங்களை குறைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  எளிமையான வகையில் கல்வி கற்றல், 13 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வியை அறிமுகம் செய்வது, 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு, மனோதர்பன் என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் மாணவர்களின் மனநலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அணுகுமுறைகள் போன்றவைகள் இதில் அடங்கும்" என்றார்.

"மாணவர்களுக்கு கல்வி கற்கும் பருவமானது, உளவியல், நடத்தை மாற்றங்களுக்கான காலமாகும். அந்த காலகட்டத்தில் மனநிலையைப் பாதிக்கும் வகையிலான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக கல்வி தொடர்பான அழுத்தம், சக மாணவர்களின் அழுத்தம், போட்டி மனப்பான்மை, நடத்தை தொடர்பான மாற்றங்கள், எதிர்காலம் பற்றி பயம் போன்றவைகள் மாணவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்" என்று மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்களின் உளவியல் மற்றும் உணர்வு மேம்பட ஒட்டுமொத்த கட்டமைப்பை ஏற்படுத்தி உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

***

SM/GS/RJ


(रिलीज़ आईडी: 1909147) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia , Telugu