சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளின் கீழ் மின்னணு சுகாதார முறையை நாடு முழுவதும் முன்னெடுத்துச் செல்ல இந்திய பணியாற்றி வருகிறது- டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 21 MAR 2023 1:49PM by PIB Chennai

‘கடைக்கோடி  குடிமகனுக்கும் உலகளாவிய மருத்துவ சேவைகள்’ என்ற கருப்பொருளோடு நடைபெற்ற சர்வதேச  மின்னணு சுகாதார மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  டாக்டர் மன்சுக் மாண்டவியா  உரையாற்றினார்.

அப்போது, சுகாதார சேவைகளை அளிப்பதில் மின்னணு சுகாதார முறை சிறப்பானது என்று கூறிய அவர், இதில் ஒட்டுமொத்த உலகளாவிய சுகாதார சேவை இலக்குகளை அடைய செய்வதற்கான திறன் உள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார சேவைகளை செயல்திறன் மிக்க முறையில் வழங்க மின்னணு சுகாதார முறை  பெரிதும் கைகொடுக்கும் என்று குறிப்பிட்டார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறை 200 மில்லியனுக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த தம்பதிகள், 140 மில்லியன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 120மில்லியன் குழுந்தைகளை உள்ளடக்கிய தரவுகளை இந்தியா உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.

இதேபோல், சிறப்பான ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் மூலம் எளிதில் பரவாத 5 தொற்று நோய்கள் குறித்து 30 வயதுக்கும் மேற்பட்ட 15 மில்லியன்  பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறினார்.

                          

சுகாதார சேவைகளில்,  மின்னணு பரிமாற்றங்களை புகுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஏதுவான அம்சங்களை முன்னிறுத்திய கொள்கைகளை வகுக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்.

 

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் நோக்கமான ஒரே பூமி. ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதன் அடிப்படையில், மின்னணு சுகாதார மருத்துவ சேவைகளை நாடு முழுவதும் வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

உலகம் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில்  கோ-வின், இ-சஞ்சீவனி, ஆரோக்கிய சேது போன்ற செயலிகளை இந்தியா உருவாக்கியிருப்பது,  உலகளாவிய சுகாதார சேவை மீது இந்தியா காட்டும் அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக கூறினார்.

மருத்துவச் சேவைகளை திறம்பட வழங்குவதில் மின்னணு சுகாதாரச் சேவைகள் பெரும் பங்காற்றும் என்று குறிப்பிட்ட அவர், மருந்து தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படுவதுடன் தொலைதூர  மருத்துவம், இ-சஞ்சீவனி என்ற தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை மூலம் 100 மில்லியனுக்கும் மேலான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

கோவின் தடுப்பூசி மேலாண்மை முறை மூலம் 220 கோடிக்கும்  மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதை குறிப்பிட்ட  அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மின்னணு சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவை குறைப்பதும், பொருளாதார மேம்பாட்டுக்கான அம்சங்களாக திகழ்வதாக தெரிவித்தார்.

***


SM/ES/RS/KRS


(Release ID: 1909123) Visitor Counter : 189