சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசியில் (வாரணாசி) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுற்றுலா நிர்வாகத் தலைமைகளுக்கான கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை ஏற்பு

प्रविष्टि तिथि: 17 MAR 2023 4:28PM by PIB Chennai

காசியில் (வாரணாசி) இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்புக் குழு சுற்றுலா நிர்வாகத் தலைமைகளுக்கான கூட்டத்திற்கு மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை ஏற்றார்.

 இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையில் மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட கூட்டு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர, சுற்றுலாத்துறைக்கான பிராண்டுகளை உருவாக்கி மேம்படுத்துதல், கலாச்சார பெருமைகளை மேம்படுத்துதல், இத்துறைச் சார்ந்த தகவல்களை பகிர்தல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய சுற்றுலா நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேம்படுத்துதல், சேவைகளின் தரங்களை உயர்த்துதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

***

AP/GS/AG/KRS


(रिलीज़ आईडी: 1908068) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Odia