அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆய்வகம், தொழில்துறை மற்றும் சந்தை ஆகியவற்றுக்கு இடையேயும் விவசாயிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்: சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி

Posted On: 17 MAR 2023 8:47AM by PIB Chennai

ஹரியானாவில் உள்ள குருகிராம் பல்கலைக்கழகம், சி.எஸ்.ஐ.ஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (CSIR-NIScPR), ஹரியானாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து “அறிவியல் மாநாடு மற்றும் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி 2023” என்ற நிகழ்ச்சியை மார்ச் 15-16 ஆகிய தேதிகளில் நடத்தியது. வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஊரகப்பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் சி.எஸ்.ஐ.ஆர்-இன் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடம் எடுத்துரைப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.

சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆய்வகம், தொழில்துறை மற்றும் சந்தை ஆகியவற்றுக்கு இடையேயும் விவசாயிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தின் உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் கைலாஷ் சந்திர ஷர்மா, சி.எஸ்.ஐ.ஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், குருகிராம் பல்கலைக்கழகத் துணைத் தலைவர் பேராசிரியர் தினேஷ் குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆய்வகம், தொழில்துறை மற்றும் சந்தை ஆகியவற்றுக்கு இடையேயும் விவசாயிகள் மிக முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர் கலைச்செல்வி தமது உரையின்போது கூறினார். சாமானிய மனிதருக்கான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப செயல்பாடு குறித்து அவர் வலியுறுத்தினார். ஒரு வாரம், ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தில் அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களும் கலந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

***

(Release ID: 1907835)

SRI/RB/GK

 

 

 



(Release ID: 1907936) Visitor Counter : 124