பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு தன்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 17 MAR 2023 12:46PM by PIB Chennai

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு தன்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இத்துறையில் தற்சார்பு தன்மையை ஏற்படுத்துவது இந்தியாவைச் சேர்ந்த திறமையானவர்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர்  திரு ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவே பாதுகாப்புத்துறைக்கு தேவையான 99 சதவீத கொள்முதல்கள் செய்யப்படுவதன் மூலம் இந்த நிதியாண்டில்  சுமார் ரூ. 2.71 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ரூ. 70,500 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பாதுகாப்புத்துறையில் தற்சார்பு தன்மையை நிலைநாட்டுவது இந்தியாவின் திறமைசாலிகளுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும்.”

***

(Release ID: 1907919)

SRI/GS/AG/KRS


(रिलीज़ आईडी: 1907932) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam