எஃகுத்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய உருக்கு அமைச்சகம் 17-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது
प्रविष्टि तिथि:
16 MAR 2023 4:23PM by PIB Chennai
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நிறுவனங்களுடன் மத்திய உறுப்பு அமைச்சகம் பிரத்யேக உருக்குக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இதற்கான நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் 17-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உருக்கு தொடர்பான 20 துணைப் பிரிவுகளைச்சேர்ந்த 27 நிறுவனங்களுடன் 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மத்திய உருக்கு மற்றும் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் திரு. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
***
(Release ID: 1907569)
SRI/PKV/SG/KRS
(रिलीज़ आईडी: 1907668)
आगंतुक पटल : 189