பாதுகாப்பு அமைச்சகம்

கடல் டிராகன் 23 பயிற்சி

Posted On: 16 MAR 2023 9:32AM by PIB Chennai

அமெரிக்க கடற்படை நடத்தும், கடல் டிராகன் 23 என்ற கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய கடற்படையின் விமானம் அமெரிக்காவின் குவாம் நகரை 14ம் தேதி சென்றடைந்தது. எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான இந்தத் தொலைதூர பயிற்சி மூன்றாவது முறையாக இந்தாண்டு நடைபெறுகிறது.

15ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டுப் பயிற்சி 30ம் தேதி வரை நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இந்தப் பயிற்சி விரிவடைந்து வருகிறது. இதில் நவீனப் பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடலுக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியும் திறன்களை, பயிற்சியில் பங்கேற்கும் விமானங்கள் கொண்டிருக்கும். இந்த விமானங்கள் தங்களது கண்டுபிடிப்பை மற்ற பயிற்சி விமானங்களுடன் பகிர்ந்து கொள்ளும். இந்தப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் பி81, பி8ஏ பிரிவு விமானங்கள் பங்கேற்கும் அமெரிக்கா, ஜப்பான், கனடா, கொரியா ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுப்  பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.

நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை இந்தக் கூட்டுப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

SRI/PKV/SG(Release ID: 1907431) Visitor Counter : 189