எஃகுத்துறை அமைச்சகம்

மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி 2023 இல் சர்வதேச தினை ஆண்டுக் கொண்டாட்டம்

Posted On: 15 MAR 2023 12:04PM by PIB Chennai

தினைகளை பிரபலப்படுத்தும் முயர்சியாக, ஹைதராபாத்தில் நடந்த மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி 2023 இல் தேசிய கனிம வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) சூப்பர்ஃபுட் என்று கூறப்படும் தினைகளை விநியோகித்தது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடப்படுவதையொட்டி, என்எம்டிசி பெண் தொழில்முனைவோர்கள் தினை வணிகம் மேற்கொண்டு, நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்க ஊக்குவித்துள்ளது. நிறுவனத்தின் சார்பாக, திரு. கே பிரவீன் குமார், தலைமை இயக்குனர் (தொழிலாளர் மற்றும் சட்டம்) மற்றும் திரு. கே மோகன், தலைமை மேலாளர் (பணியாளர்) ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு தினைகளை விநியோகித்து ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு தினைகளின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து கலந்துரையாடினர்.

தினை நுகர்வு அதிகரிக்கும் முயற்சியில், என்எம்டிசி சமீபத்தில் ஐஐஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற ஹைதராபாத் அஹோபிலம் ஃபுட்ஸ் நிறுவனம் மூலம் ‘ஊட்டசத்து உணவு:தினை’ என்ற அமர்வை நடத்தியது. அமர்வைத் தொடர்ந்து தினை மதிய உணவு வழங்கப்பட்டது.

***

AD/SRI/KPG



(Release ID: 1907287) Visitor Counter : 121