உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

நாட்டில் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன, அதில் 11 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன

Posted On: 13 MAR 2023 3:13PM by PIB Chennai

பசுமை விமான நிலையங்கள் கொள்கையின் கீழ் நாட்டில் 21 பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி, சிந்துதுர்க், கர்நாடகாவில் கல்புர்கி, விஜயபுரா, ஹசன், ஷிவமோகா, மத்தியப் பிரதேசத்தில் தப்ரா (குவாலியர்), உத்திரப் பிரதேசத்தில் குஷிநகர், நொய்டா(ஜூவர்), குஜராத்தில் தலேரா, ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஓர்வக்கல் (கர்நூல்), மேற்குவங்கத்தில் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங், கேரளாவில் கண்ணூர், அருணாச்சலப் பிரதேசத்தில் இட்டாநகர்.

இவற்றில் துர்காபூர், ஷிர்டி, கண்ணூர்,  பாக்யாங், கல்புர்கி, ஓர்வக்கல் (கர்நூல்), சிந்துதுர்க், குஷிநகர், இட்டாநகர், மோபா, ஷிவமோகா ஆகிய 11 பசுமை விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இத்தகவலை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் விகே சிங் கூறினார்.

***

AP/IR/RJ/RR



(Release ID: 1906379) Visitor Counter : 197