இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

புதுதில்லியில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேலோ இந்தியா தஸ் கா தம்’ என்ற 10 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் பிரமாண்ட நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்

Posted On: 10 MAR 2023 3:01PM by PIB Chennai

சர்வதேச மகளிர்  தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாககேலோ இந்தியா தஸ் கா தம்என்ற 10 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் பிரமாண்ட நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் புதுதில்லியின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டி இந்தியாவில் உள்ள 50 நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டித் தொடரை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், நாடு முழுவதும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருவதன் விளைவாக 'தஸ் கா தம்' முன்முயற்சியானது பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதை ஊக்குவிக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றார். மார்ச் 10 முதல் (இன்று) 31-ம் தேதி வரையில் 10 வகையான விளையாட்டுகளில் இந்தியாவின் 26 மாநிலங்களில் சுமார் 50 நகரங்களில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் 15,000 தடகள வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிக்காக மத்திய அரசு ரூ.1 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் கலந்துகொண்டார். மேலும் 'கேலோ இந்தியா தஸ் கா தம்' நிகழ்வில் கலந்துகொண்டவர்களோடு சேர்த்து 2,000 தடகள வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

 

*****

AP/GS/RJ/KPG



(Release ID: 1905633) Visitor Counter : 116