குடியரசுத் தலைவர் செயலகம்
கென்யா நாட்டின் உச்சநீதிமன்ற குழு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
10 MAR 2023 3:25PM by PIB Chennai
கென்யா நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்த்தா கே.கூம் தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 10,2023) சந்தித்தனர்.
அவர்களை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவுக்கும், கென்யாவுக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு உள்ளது என்று கூறினார். கென்யாவின் புதிய அரசுடன் உயர்நிலை ஒத்துழைப்பைத் தொடர்ந்து பராமரிக்க இந்தியா ஆவலுடன் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நீதிபதி மார்த்தா கே.கூம் தான் கென்யா உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பதையும் குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். கென்யாவில் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பாராட்டுத் தெரிவித்தார்.
-------
AP/PLM/SG/KPG
(रिलीज़ आईडी: 1905610)
आगंतुक पटल : 183