வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2023 12:23PM by PIB Chennai

புதுதில்லியில் வர்த்தகப்  பேச்சுவார்த்தை 2023 நிறைவடைந்த பிறகு, இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை செயல்திட்டத்தின் கீழ் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இன்று கையெழுத்திட்டன. 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமிகு கீனா ரைமோண்டோ புதுதில்லி வந்துள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இரு நாடுகளிடையே புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்தியாவின் குறைகடத்தி இயக்கம் மற்றும் அமெரிக்காவின் சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தின் அடிப்படையில் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மை குறித்து இரு நாடுகளின் அரசுகளிடையே ஒருங்கிணைந்த இயக்கமுறையை உருவாக்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகும். பரஸ்பர நன்மை பயக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமை மற்றும் திறன் மேம்பாட்டில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.

 

***

AP/RB/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1905536) வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu