வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான முதலாவது சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அறிமுகம்

Posted On: 09 MAR 2023 5:04PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 7, 2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் மகளிரின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான முதலாவது சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஹர்தீப்சிங் பூரி அறிமுகப்படுத்தினார்.  

இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 8 முதல் ஏப்ரல் 5, 2023 வரை அனுப்பலாம். சுய உதவிக்குழுக்கள், சிறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மகளிர் தலைவர்கள் மற்றும் தூய்மைப்பணி சாதனையாளர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  சமுதாயம் மற்றும் பொதுக் கழிப்பறை மேலாண்மை, கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு சேவை, கழிவிலிருந்து செல்வமாக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்டப் பிரிவுகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

 

***

 

AP/IR/RJ/KPG(Release ID: 1905401) Visitor Counter : 140