பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது நிதிக் குழுவின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கான இணையவழித் தணிக்கை மற்றும் நிதி விடுவிப்பு முறை குறித்து பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் நாளை மாநிலங்களுடன் ஆலோசனை

Posted On: 09 MAR 2023 11:26AM by PIB Chennai

15-வது நிதிக் குழுவின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கான இணையவழித் தணிக்கை மற்றும் நிதி விடுவிப்பு முறை குறித்து  பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் மாநிலங்களுடன் நாளை புதுதில்லியில்  ஆலோசனை நடத்த உள்ளது.  பஞ்சாயத் ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில்குமார் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பஞ்சாயத் ராஜ் அமைச்சக கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார், இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நாகர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  மாநில பஞ்சாயத் ராஜ் துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை இயக்குநரக பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

நிதி அமைச்சக நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15-வது நிதிக்குழு மானியங்களைப் பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் மாநிலங்களுக்கு விடுவிக்கிறது. இணையதளத்தின் தற்காலிக அல்லது தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை வெளியிடும் மாநிலங்கள் மற்றும் கிராம உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மட்டுமே
2021-22-ம் நிதியாண்டிலிருந்து மானியங்கள் வழங்கப்படும் என்று
15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

 

***

AD/IR/KPG


(Release ID: 1905273) Visitor Counter : 292