தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

முதல் தொழிலாளர் 20 (L20) கூட்டம் பஞ்சாபின் அமிர்தசரஸில் 2023 மார்ச் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ளது

Posted On: 05 MAR 2023 3:59PM by PIB Chennai

முதல் தொழிலாளர் 20 (L20) கூட்டம் பஞ்சாபின் அமிர்தசரஸில் 2023 மார்ச் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி-20 அமைப்பின்கீழ் உள்ள குழுக்களில் L20 குழுவும் ஒன்றாகும். ஜி-20 நாடுகளின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்குழு, தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் பகுப்பாய்வுகள் மற்றும் கொள்கை பரிந்துரைகளை வழங்குகிறது. இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ், L-20 தொடக்கக் கூட்டத்தை முன்னணி தேசிய தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் ஏற்பாடு செய்கிறது. இக்கூட்டத்தைத் தவிர்த்து, L20 சந்திப்பில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அமிர்தசரஸின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் காண பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

***

AP/CR/DL



(Release ID: 1904395) Visitor Counter : 147