சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவின் பருவநிலைக் கொள்கை, நீடித்த வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பையும் நோக்கியதாக உள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்
Posted On:
05 MAR 2023 1:27PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்தியாவின் பருவநிலைக் கொள்கை நீடித்த வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை நோக்கியதாக உள்ளது என்றும், அதே நேரத்தில் வளர்ச்சியின் காரணமாக வெளியேறும் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், துறைகள் முழுவதும் ஆற்றல் திறனை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுவதாகக் கூறினார். 'காலநிலை ஸ்மார்ட் கொள்கைகளுக்கான அடுத்த கட்டம்' என்ற தலைப்பில் இன்று புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடலில் பேசிய அவர், 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் 7 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், ஐ.நா.வின் முக்கியமான தசாப்தத்தின் மூன்றாவது ஆண்டில் நாம் நுழையும் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பருவநிலை ஸ்மார்ட் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதை உறுதி செய்வது இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றார்.
இயற்கையிலிருந்து உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இயற்கை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளதே தவிர பேராசையை அல்ல. நாம் குறைவாகப் பயன்படுத்துபவர்கள், நாம் பயன்படுத்துவதை மீண்டும் பயன்படுத்துபவர்கள். சுழற்சிப் பொருளாதாரம் இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தியர்கள் பூமியை நேசிப்பவர்கள் என்பதால்தான், உலக மக்கள்தொகையில் 17% க்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு, 1850 மற்றும் 2019 க்கு இடையில் உலகளாவிய ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் வளர்ந்த நாடுகளின் பங்களிப்பு 60%க்கு எதிராக, வெறும் 4% மட்டுமே பங்களித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இன்றும் கூட, இந்தியாவின் தனிநபர் உமிழ்வு உலகின் தனிநபர் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
உலகளவில் இந்தியா நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 4 வது இடத்திலும், காற்று சக்தியின் நிறுவப்பட்ட திறனில் 4 வது இடத்திலும், சூரிய மின்சக்தி நிறுவப்பட்ட திறனில் 5 வது இடத்திலும் உள்ளது என்று திரு யாதவ் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவில் சூரிய சக்தியின் நிறுவப்பட்ட திறன் 23 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 8.5 ஆண்டுகளில் இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 396% அதிகரித்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். பருவநிலை ஸ்மார்ட் கொள்கை இந்தியாவின் வளர்ச்சி முன்னுதாரணத்தின் முன் மற்றும் மையமாக உள்ளது என்பதற்கு இந்த புள்ளிவிவரம் சான்றாகும். சுற்றுச்சூழலின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் போது, உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றார் திரு யாதவ். நமது பிரதமர் திரு மோடியின் தலைமையில் இந்தியா 2015 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அதன் ஆரம்ப பிரகடனத்தை, காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே, செய்த ஒரே ஜி20 உறுப்பு நாடாக மாறியது. நமது இலக்கை காலக்கெடுவிற்கு முன்பே நாம் அடைந்துவிட்டோம் என்பது மட்டுமல்லாமல், ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற சிஓபி 27 மாநாட்டில் நீண்ட கால குறைந்த உமிழ்வு மேம்பாட்டு உத்தி திட்டங்களுடன் இன்னும் அதிக லட்சிய இலக்குகளை அடைய முயலும் புதிய பிரகடனத்தையும் சமர்ப்பித்துள்ளோம் என்றார் அவர். இதன் மூலம், புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளைச் சமர்ப்பித்த 58 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
***
AP/PKV/DL
(Release ID: 1904386)
Visitor Counter : 190