எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் முன்முயற்சிகள் எரிசக்தி மையத்தின் முதல் நிர்வாகக்குழுக் கூட்டத்தை இந்தியா நடத்தியது

प्रविष्टि तिथि: 01 MAR 2023 11:41AM by PIB Chennai

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பான பிம்ஸ்டெக் முன்முயற்சிகள் எரிசக்தி மையத்தின் முதல் நிர்வாகக்குழுக் கூட்டத்தை பெங்களூருவில் 2023, பிப்ரவரி 27-ந் தேதி  இந்தியா நடத்தியது. மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அஜய் திவாரி இந்த மையத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவேற்று, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான  ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.

 இந்த அமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பு நாடாக உள்ளன. உறுப்புநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியதற்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர்.  இந்தியாவின் “அருகாமைக்கு முன்னுரிமை” மற்றும் “கிழக்குப் பிராந்திய செயல்பாடுகள்“  போன்ற கொள்கைகள் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.  இந்தியாவில் இந்த அமைப்பின் எரிசக்தி மையம்  தொடங்கவிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த மையத்திற்கு தலைவராக ஞான்ஷாம் பிரசாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

***

AP/GS/AG/KP


(रिलीज़ आईडी: 1903353) आगंतुक पटल : 306
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati