ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மருந்தகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை ஏற்பு

Posted On: 01 MAR 2023 11:49AM by PIB Chennai

தேசிய மருந்தகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை ஏற்றார்.

“ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகள் மருந்தகத்துறையில்  நிலையான வளர்ச்சிக்கு அவசியமாகும். தற்போது தற்சார்பு முறையில் இருந்து லாபம் ஈட்டும் வழியில் ஈடுபட வேண்டியதன் முக்கியமானதாகும்.  அதற்கு ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்து தொழிற்சாலைகளோடு இணைப்பை ஏற்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தத்துறையின் மனிதவள நிபுணத்துவத்தை பயன்படுத்துவதோடு, இதன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் பின்பற்றப்படும் சிறந்த  நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தேசிய மருந்தகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உயர்தர ஆராய்ச்சி மையமாகவும், மருந்தகத்துறையில் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகவும் மாற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

“இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் இந்த நிறுவனம் மேலும் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு  உதவிகரமாக அமையும்.  மருந்தகத் துறையில் புத்தாக்க முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரத்துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் வர்த்தக ரீதியில் தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அதற்கு இந்த நிறுவனத்திற்கும், உயிரி தொழில்நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித்துறை போன்ற பல்வேறு இத்துறை சார்ந்த நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

 

***

AP/GS/AG/RR


(Release ID: 1903348) Visitor Counter : 150