குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டென்மார்க் இளவரசர் மற்றும் இளவரசி, குடியரசுத்தலைவரை சந்தித்தனர்

प्रविष्टि तिथि: 28 FEB 2023 7:12PM by PIB Chennai

டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசர் திரு ஃபிரெடரிக் மற்றும் பட்டத்து இளவரசி திருமதி மேரி ஆகியோர், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை  குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (28.02.2023) சந்தித்தனர்.

 

அவர்களை வரவேற்ற குடியரசுத்தலைவர், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்துள்ளதாகக் கூறினார். இருநாடுகளும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களில் இந்தியாவும் டென்மார்க்கும் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியா பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனித்துவமான பாதையை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இயற்கைக்கு மதிப்பு அளித்து சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறை இயக்கத்தை இந்தியா அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் உலகத்தை ஒரே குடும்பமாக இணைக்கும் என்றும் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID: 1903152)

AP/PLM/KPG/KRS


(रिलीज़ आईडी: 1903187) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi