இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

4வது தேசிய இளையோர் நாடாளுமன்றத் திருவிழாவின் நிறைவு விழாவில் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 28 FEB 2023 5:25PM by PIB Chennai

நான்காவது தேசிய இளையோர் நாடாளுமன்றத் திருவிழாவின் நிறைவு விழாவில் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா புது தில்லியின் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மார்ச் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு உரையாற்றுகிறார். இந்தத் திருவிழாவில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மூன்று பேர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர், இத்துறையின் இணை அமைச்சர் திரு. நிஷித் பிரமானிக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தேசிய இளையோர் நாடாளுமன்றத் திருவிழாவின் நோக்கமானது, பொதுத்துறைகளில் வருங்காலத்தில் பணியாற்ற உள்ள  இளைஞர்களின் கருத்துக்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக தான். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிரதமரின் `மனதின் குரல்` நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழா குறித்துப் பேசினார். அதன் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாவது தேசிய இளையோர் நாடாளுமன்றத் திருவிழா “புதிய இந்தியாவின் குரலாக இருந்து, தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைகளை உருவாக்க பங்களியுங்கள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. அதில் 88,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன் இரண்டாவது திருவிழாவில் 23 லட்சம் பேர் இணையதள வழியாகப் பங்கேற்றனர். மூன்றாவது நிகழ்வில் சுமார் 2.44 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர்.

                                      ***

AP/GS/JJ/KRS              


(रिलीज़ आईडी: 1903135) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , English , Urdu , हिन्दी