சுற்றுலா அமைச்சகம்
ஜம்மு பதர்வாவில் தனித்துவ முன்னெடுப்பாக சுற்றுலாத் துறை அமைச்சகம் முதலாவது பனி மாரத்தான் போட்டிக்கு பிப்ரவரி 26, 2023 அன்று ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
27 FEB 2023 11:58AM by PIB Chennai
ஜம்மு பதர்வாவில், பாதர்வா சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் முதலாவது பனி மாரத்தான் போட்டியை பிப்ரவரி 26, 2023 அன்று நடத்தியது. தோடா மாவட்ட துணை ஆணையர் திரு விசேஷ் மஹாஜன் கொடியசைத்து இதனைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இது போன்ற சாகச விளையாட்டுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், விளையாட்டுப் பிரிவுகளில், உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு நிறைவு, ஜி-20 இந்திய தலைமைத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், முதலாவது பிரம்மாண்ட பனி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாரத்தான் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 130-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 25 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளில் இந்த மாரத்தான் குல்தந்தாவிலிருந்து தொடங்கியது.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1902724)
Visitor Counter : 182