கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம்தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது
Posted On:
25 FEB 2023 3:17PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு நிழ்ச்சியை நடத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், பிற மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட எம்பி கங்கா விலாஸ் கப்பலின் இந்தப் பயணத்தை பிரதமர் வாரணாசியில் கடந்த ஜனவரி 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தனது 50 நாள் பயணத்தில், இந்தியா- வங்கதேசம் இடையேயான நீர்வழியிலான 3,200 கிலோ மீட்டர் தூரத்தை இக்கப்பல் கடக்கிறது. இந்தக் கப்பலின், தனது 50 நாள் பயணம் வரும் 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இது பாட்னா சாஹிப், புத்தகயா, விக்ரமஷிலா, டாக்கா, கஜிரங்கா தேசியப் பூங்கா ஆகியவற்றைக் கடந்துள்ளது. தனித்துவமான வடிவம் கொண்ட இந்திக் கப்பலில் 36 சுற்றுலாப் பயணிகளும் பயணிக்கின்றனர்.
***
SRI / ES / DL
(Release ID: 1902397)
Visitor Counter : 157