மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க அயராது உழைத்து வருகிறார்: மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 24 FEB 2023 5:13PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், பெங்களூருவில் 2-வது செமிக்கான் இந்தியா எதிர்கால வடிவமைப்பு என்ற முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியை இன்று தொடங்கிவைத்தார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அடுத்த தலைமுறை புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடனான இந்த சந்திப்பு செமிக்கண்டக்டர் துறையில் இந்தியாவின் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர்,  மின்னணுவியல் சந்தையில் இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார். இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவாக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  செமிக்கான் இந்தியா எதிர்கால வடிவமைப்பு நிகழ்ச்சி இளைஞர்களுக்கான ஒரு வாய்ப்பு என்று அவர் தெரிவித்தார்.

செமிக்கண்டக்டர் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  அவர் தெரிவித்தார். எதிர்கால திறன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வித் திட்டத்திலும்  புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். விஎல்எஸ்ஐ வடிவமைப்பில் புதிய படிப்புகளைத் தொடங்கும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  அமைச்சரின் உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

***

AP/PLM/KPG/KRS



(Release ID: 1902140) Visitor Counter : 147