பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

‘ஆதி மஹோத்சவ்’ மீதான ஆர்வம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 23 FEB 2023 9:14AM by PIB Chennai

‘ஆதி மஹோத்சவ்’ மீதான பரவலான ஆர்வம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் டாக்டர். போலா சிங் 'ஆதி மஹோத்சவ்' நிகழ்ச்சியை தான் பார்வையிட்டது குறித்து தொடர் ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில், இந்தியா முழுவதிலுமிருந்து பழங்குடி கலாச்சாரத்தின் அற்புதமான விளக்கக்காட்சியை நீங்கள் காணக்கூடிய வகையில் இது மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த தொடர் ட்வீட்டிற்கு பிரதமர் பதிலளித்தார்.

பிரதமர் தனது பதில் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“‘ஆதி மஹோத்சவ்’ மீதான உங்களது ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் உணவு பற்றிய உங்கள் அனுபவம் ஊக்கமளிக்கிறது.”

***

(Release ID: 1901589)

RB/SRI/RR


(रिलीज़ आईडी: 1901604) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , Odia , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam