நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

திரு. தர்மேந்திர பிரதான் தலைமையில் திட்ட உயர்மட்டக் குழுக் கூட்டத்தை அடல் புத்தாக்க இயக்கம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 21 FEB 2023 2:07PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தலைமையில் அடல் புத்தாக்க இயக்கம், நிதி ஆயோக் நடத்திய திட்ட உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், திட்டத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு அடல் புத்தாக்க இயக்கம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வரும் ஆண்டுகளில் முக்கிய முன்முயற்சிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் போது மத்திய அமைச்சரும், திட்ட உயர்மட்ட குழுத் தலைவருமான திரு. தர்மேந்திர பிரதான், நாட்டில் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு ஏதுவாக சூழ்நிலையை உருவாக்கி வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு ஆற்றலை வளர்க்க வேண்டும் என்றார். புத்தாக்க சிந்தனைகளோடு வளர்ச்சியை அடைய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். 

அடல் புத்தாக்க இயக்கத்தை பொதுத்துறை நிறுவனங்களோடு ஒருங்கிணைப்பதன் மூலம் துறை சார்ந்த தளத்தில் புதிய மையங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்றார். பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் புத்தாக்கம் தொடர்பாக பாடத்திட்டத்தில் கொண்டுவர அடல் புத்தாக்க இயக்கம் மற்றும் கல்வி அமைச்சகத்தை பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

 

***

AP/GS/SG/KRS


(रिलीज़ आईडी: 1901028) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu